Alhamdulillah

Thursday, December 14, 2017

أعوذ بالله من الشيطان الرجيم
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ...     (கோள் சொல்லித் திரிவது) இந்த கேவலமான ஷைத்தானின்  செயலை செய்ய தூண்டும் நபர்கள் மிகத் தீயவர்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.  எச்சரிக்கையாக இ௫ந்துக்கொள்ளுங்கள். உங்கள் கப்௫ (மண்ணறை) வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் இம்மை மறுமையின் வெற்றி அடையலாம்.

1378. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இரு கப்ருகளைக் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, “இவ்விரு வரும் வேதனை செய்யப்படுகிறார்கள்: ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர்“ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள் “இவ்விரண்டின் ஈரம் காய்ந்த வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்“ எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

இந்த இழிவானவர்களைப் பற்றி
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் .

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏ 
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
(அல்குர்ஆன் : 68:10)

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِيْمٍۙ‏ 
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
(அல்குர்ஆன் : 68:11)

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏ 
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
(அல்குர்ஆன் : 68:12)

عُتُلٍّ  بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ‏ 
கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
(அல்குர்ஆன் : 68:13)

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிய ...
visit : www.islamkalvi.com